கனமழையால் குற்றாலம் அருவியில் சிக்கிய 2 பெண்கள் பலி!! 3 பேர் பத்திரமாக மீட்பு!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு படையெடுத்தபடி உள்ளனர். அவர்கள் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள். மேலும் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு நேற்று அங்கு பலத்த மழை ெபய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் இரவு 7 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருவியில் இருபகுதிகளில் குளித்துக் கொண்டு இருந்த ஆண், பெண் சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகள் அருவியில் இருந்து வெளியேறிக் கொ ண்டு இருந்தனர். ஆனால் இந்த வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாக 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அங்கு இருந்த போலீசார் மற்றும் சக சுற்றுலா பயணிகள் ஆண் நபரையும், 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், மற்ற 2 பெண்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். 2 பெண்கள் உடல் மீட்பு இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, வெள்ளம் செல்லும் பகுதியில் பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருவிக்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அந்த 2 பெண்களின் உடல்கள் மிதந்தன. உடனே தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பெண்களின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

சென்னை – பண்ருட்டியைச் சேர்ந்தவர்கள் இதையடுத்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (வயது 46), பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) என்பது தெரியவந்தது. இவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்களா? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க தடை இந்த சம்பவத்தை தொடர்ந்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

கலெக்டர் விரைந்தார் இதற்கிடையே, தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மெயின் அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கினர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து உள்ளனர். குற்றாலம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். மேலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,
-அன்சாரி, நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp