திருப்பூரில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் பாஜக வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். மேலும் அண்ணனுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் விளம்பரம் செய்துள்ளனர். ஆனால் சிக்கன்னா அரசு கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று விளக்கம் அளித்து உள்ளனர். சிக்கன்னா அரசு கல்லூரியின் அனுமதி வாங்காமலேயே எப்படி சிறப்பு முகாம் நடத்துவார்கள் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா திருப்பூர்.