பாட்மிண்டன் அணிக்கான போட்டியில் பாகிஸ்த்தான் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அனைத்து இந்திய ஷட்டில் வீரர்கள் பாகிஸ்தானின் சவாலை எளிதாகச் முறியடித்தனர். இந்திய அணிக்கு அஸ்வனி பொன்னப்பா-எஸ் ரெட்டி வெற்றி தொடக்கம் கொடுத்தனர். பிவி சிந்து ஸ்கோரை 3-0 என மாற்றியதால் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-0 என முன்னேறினார். பின்னர் ஆடவர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா 5-0 என பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.
2022 காமன்வெல்த் விளையாட்டு கலப்பு அணி பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பர்மிங்காமில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் (NEC) நேற்று நடந்த ஐந்து ஆட்டங்களிலும் இந்தியா நேர் செட்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானால் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு செட்டைக்கூட வெல்லாததால், இந்தியாவின் வலிமைக்கு எந்த சவாலும் இல்லை என்பதை நிரூபித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் எஸ் ரெட்டி ஜோடி பாகிஸ்தானின் எதிரணியை நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவுக்கு தொடக்க வெற்றியை தேடித்தந்தது.
இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முராத் அலியை நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா 2-0 என முன்னிலை பெற்றார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, பாகிஸ்தானின் முன்னணி வீராங்கனையான மஹூர் ஷாசாத்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். பின்னர் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் சிராக் ஷெட்டி மற்றும் எஸ் ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி பிரஜாபதி ஜோடி இந்தியாவுக்காக ஐந்தாவது ஆட்டத்தில் ஸ்டைலாக வெற்றியின் கையெழுத்திட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.