கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கெட்டிமல்லன் புதூர் அருகே ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் அவர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார் அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி சுமார் 600 கிலோ அரிசி இறுந்தது இதை கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக தெரியவந்துள்ளது.
எனவே கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரியைச் சேர்ந்த அப்பு என்கின்ற சிவக்குமாரை போலீசார் கைது செய்து. அதன்பின் அவரையும் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.