டிராபிக் நகரமாக பெங்களூர் கூறப்பட்டு வருகிறது. மக்கள் அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதாக சொல்லப்படுகிறது . 2021 டாம் டாம் டிராபிக் இன்டெக்ஸ் படி, பெங்களூரில் 48% போக்குவரத்து நெரிசல் உள்ளது, மற்றும் சராசரியாக ஒரு குடிமகன் போக்குவரத்து காரணமாக ஒரு வருடத்திற்கு 110 மணி நேரத்தை இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும் இது குறைந்த பாடு இல்லை.
இந்த நிலையில் பெங்களூர் காவல் துறை கூகுள் மேப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் டிராபிக் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப் உதவியுடன் தற்போது பெங்களூரு வாகன ஓட்டிகள் எந்தெந்த இடத்தில் எந்த அளவுக்கு டிராபிக் இருக்கின்றது என்பது அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் பாதையை நிர்ணயித்துக் கொள்வதால் இது பெங்களூர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
பெங்களூரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது எளிது இல்லை என்றாலும் சாலை நெறிசலை குறைக்க நகரின் போக்குவரத்து காவல்துறை தொழில்நுட்ப நிறுவனமாக கூகுளுடன் கைகோர்த்துள்ளது. இதனால் டிராபிக் லைட் நேரத்தை மேம்படுத்த, கூகுள் கூட்டு சேர்ந்த நகரமாக பெங்களூர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் மூலமாக ஒரு ஓட்டுனருக்கு சராசரி 20% காத்திருக்கும் நேரம் குறைகிறது அது மட்டும் இல்லை போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு, மற்றும் வாயு வெளியேற்றம் ஆகியவற்றை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
-எ.யாஸ்மின் பேகம், சென்னை.
2 Responses
மிகவும் முக்கியமான பதிவு.
சரியான நேரத்தில் முக்கியமான பதிவு