கிரெடாய் அமைப்பின் சார்பாக கோவையில் ஃபேர்புரோ 2022 கண்காட்சி!!

கிரெடாய் அமைப்பின் சார்பாக, கோவையில் ஃபேர்புரோ 2022, எனும் கண்காட்சி துவங்கியது, இக்கண்காட்சி 29 முதல் 31ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. கோவையில் கிரெடாய் அமைப்பின் சார்பாக ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கப்பட்டது. இக்கண்காட்சியானது வரும் 31ம்தேதி வரை நடைபெற உள்ளது.

கண்காட்சியில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இக்கண்காட்சி இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கிரெடாய் அமைப்பின் தென்மண்டல துணைத்தலைவர் ராம் ரெட்டி ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் கண்காட்சியினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் கூறும் போது:

“வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்த திட்டமிட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் இதர வங்கிகள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளது. இந்தக் கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கிரெடாய் சார்பில் 12வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சி இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது” என தெரிவித்தார். இந்த கண்காட்சியில் எஸ்பிஐ வங்கியின் முதுநிலை பொது மேலாளர் இராதாகிருஷ்ணன், கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயளாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல், எஸ்பிஐ மண்டல மேலாளர் இன்பரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp