தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் 22 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இறந்தவரின் உடலை WHO அறிவுறுத்தலின்படி அடக்கம் செய்ய கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதல் குரங்கம்மை மரணம் ஏற்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.
அதே சமயம் கொரோனாவை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.