கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகத்தை SDPI கட்சியின் கவுன்சிலர் அலிமா ராஜா உசேன் திறந்து வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “மக்களை சந்திப்போம்” என்ற பிரச்சாரம் ஜனவரி 26 முதல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்களை சந்திப்போம் எனும் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற உள்ளது.இந்நிலையில் உக்கடம், வின்சென்ட் ரோடு பகுதியில் மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகத்தை SDPI கட்சியின் 84 வது வார்டு கவுன்சிலர் அலிமா ராஜா உசேன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து கோவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது. பேசிய அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழுவதும் மக்களை சந்திப்போம் என்ற பிரச்சாரம் நடத்தி வருகிறது.அதில் கோவையில் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் ஜூலை 17ம் தேதியும்,ஜூலை 31ஆம் தேதி துடியலூர் மற்றும் ஆத்துப்பாலத்திலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி கரும்பு கடையிலும் “மக்களை சந்திப்போம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் எனும் மாபெரும் மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், கோட்டைமேடு டிவிஷன் தலைவர் அப்பாஸ், செயலாளர் முஹம்மது இர்பான், தொண்டாமுத்தூர் தெற்கு டிவிசன் தலைவர் அப்துல் ஹக்கிம்,கிணத்துகடவு டிவிசன் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.