கோவை மேட்டுபாளையம் சாலையில் ஜிஎன் மில்ஸ் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மேம்பாலம் பணி நடை பெற்று வருகிறது. இதனால் மாற்று பாதையாக மணியகாரன்பாளையம் சாலை வழியாக கவுண்டம்பாளையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது அந்த பாதையிலும் சாலை பணி நடந்து வருகிறது.
அதனால் அனைத்து வாகனங்களும் மேம்பால பணி நடை பெறும் சாலையில் தான் செல்ல எற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால் துடியலுரில் இருந்து ஜிஎன் மில்ஸ் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்று பாதையான உருமாண்டம் பாளையம், உடையாம் பாளையம் சாலை பணிகளை வேகப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
-ஜெயக்குமார், கோவை.