கோவை மாநகராட்சி செல்வபுரம் 78வது வார்டிற்கு உட்பட்ட செல்வ சிந்தாமணி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த குளத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையில் செடிகள் அனைத்தும் வளர்ந்து அந்த நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி சாதனங்கள் உடைந்து அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. முழுவதுமாக பராமரிப்புகளே இல்லை என்ற நிலையில் அந்தப் பூங்கா தற்போது இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த பூங்காவை சீரமைக்குமா?? என்பதே நடைபயிற்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கையாக உள்ளது!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
One Response
அருமை