சென்னை மாமல்லபுரத்தில் நாளை நடக்க இருக்கும் சர்வதேச செஸ் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை:
சென்னை மாமல்லபுரத்தில் 44 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் நடக்க இருக்கிறது. இந்தியாவில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடக்க இருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை. இதனால் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதால் இரு நாட்களும் பலத்த போலீஸ் பாதுகாப்பு சென்னையில் போடப்பட்டுள்ளது. அதாவது போட்டி நடக்க இருக்கும் நேரு விளையாட்டு மைதானத்திலும், பிரதமர் மோடி தங்கும் இடமான கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடக்கும் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 22 ஆயிரம் போலீசாருக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு, கமெண்ட்டோ மற்றும் பிரதமர் பாதுகாப்பு வீரர்கள் தீவிரமாக பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தனி பாதுகாவலர்களான எஸ்பிஜி குழுவினர் அவர் செல்லும் வழிகளையும், போட்டி நடக்கும் இடங்களிலும் மற்றும் பட்டமளிப்பு விழா நடக்கும் இடங்களையும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-சிவகுமார் சிந்தாதிரிப்பேட்டை.