நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களில் இசைஞானி இளையராஜா வெளிநாட்டில் இருந்ததால் அவரைத் தவிர மற்ற எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்ற
டெல்லி சென்ற இளையராஜாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவில் எம்.பி.யாக தமிழில் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.