பார் போற்றும் தஞ்சையிலே மாபெரும் புத்தக கண்காட்சி. ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் புத்தக கண்காட்சி தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் கட்டுப்பாட்டின் காரணமாக நடைபெறாமல் இருந்த புத்தகக்கண்காட்சி, இந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை கோலாகலத்துடன் தொடங்கியது . காலை 10 மணி முதலே தொடங்கிய புத்தக கண்காட்சி ஆனது சிறப்பு பட்டிமன்றம் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்களை இனிய சொல்வன்மை கொண்டு இனிதே நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்வான இன்று தாமரை பன்னாட்டு பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக மாலை நான்கு முப்பது மணி அளவில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதன் பின்னர் தஞ்சை வேளாங்கண்ணி கல்லூரியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன . அதன் தொடர்ச்சியாக தென்னகப் பண்பாட்டு மையத்தின் லை குழுவினரால் கரகாட்டம் நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது .நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக ஒரு மைல்கல்லாக பட்டிமன்ற ஜாம்பவான் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் இனிதே நடைபெற்றது.
சாலமன் பாப்பையா அவர்களின் குழுவினர்கள் குறிப்பாக திரு ராஜா அவர்கள் அனைவரையும் தனது இனிய சொற்களால் சொல்லாடலால் கவர்ந்து இழுத்தார். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தஞ்சை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் மற்றும் பலர் துறையினரும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நல்லமுறையில் மேற்கொண்டிருந்தனர்.
இந்தக புத்தக கண்காட்சி ஆனது ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 25ஆம் தேதி வரை சுமார் 10 நாட்கள் நடைபெறுகின்றது தஞ்சை மாநகரில் உள்ள மக்கள் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் இந்த நூலக கண்காட்சியை பயன்படுத்தி அரிதான பொக்கிஷமான நூல்களை வாங்கி படித்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நூலக அரங்கங்கள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. மற்றும் 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன், தஞ்சாவூர்.