ஆலாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார்த் தொழிற்சாலை உள்ளது. இங்கு பலர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிற் சாலை குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் , காயர் பேல்கள், பொக்லைன் டிராக்டர் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து நெகமம் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.