கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது பூசாரிபட்டி. இந்த ஊரைச்சார்ந்த கிருஷ்ண வேணி வயது 32. இவரது வீட்டின் அருகே உள்ள அரசு புறம் போக்கு இடத்தில் ஊராட்சி மூலம் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே இதற்கு கிருஷ்ணவேணி எதிர்ப்பு தெரிவித்து அவர் தீக்குளிக்க போவதாக மண்எண்ணெய் கேனுடன் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வாட்ஸ் அப்பின் மூலமாக இப்பகுதியில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன், ஆனைமலை.