கோவை மாவட்டம் கிணத்துக்கடவு முத்துக்கவுண்டனூர் பிரிவு அருகே வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கருங்கற்களை கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கிணத்துக்கடவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.