தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தமிழக முழுவதும் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 26.07.2022 நேற்று கொட்டும் மழையிலும் பெருந்திரளான ஊழியர்கள் கலந்து கொண்ட
மாலை தர்ணா போராட்டம் தோழர் – S.ஜெகநாதன் மாவட்ட தலைவர் (பொறுப்பு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார் மாவட்ட துணைத் தலைவர்-TNGPA தோழர் பழனிசாமி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் தோழர் செந்தில்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தோழர் R. மகேஸ்வரன் மாவட்ட பொதுச் செயலாளர்- அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கோவை நிறைவுரையாற்றினார். P.நடராஜன் மாவட்ட பொருளாளர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
சிறப்பு வாய்ந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசு ஊழியர் சங்கம். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம். துறை வாரிய சங்கம். மற்றும் ஆசிரியர் அமைப்புகள். ஆகியவற்றின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோவை மாவட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என மாவட்ட
செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன்&ஹனீப், கோவை.