தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்
இந்த தகவல் உண்மையா…? பொய்யா…? என்ற கேள்வி மக்கள் மத்தியில்
எழுந்து வந்த நிலையில் இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக
இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உடற்சோர்வு சற்று இருந்தது, இதனை அடுத்து பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ் குமார்.
One Response
முதல்வர் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .