புத்தாண்டு என்பது ஆண்டின் துவக்கமாக எடுக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய புத்தாண்டு என்பது ஒரு இடம் பெயர்வையும், அதன் தியாகத்தையும் அடிப்படையாக கொண்டதாகும், அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அகிலத்திற்கு சொல்ல,சொந்த மண்ணையும்,மக்களையும்,
சொத்துக்களையும்,சுகங்களையும் துறந்து வேறு ஒரு தேசத்தை நோக்கி பயணித்த அந்த தியாகமே ஹிஜ்ரத்தாகும் (இடம் பெயரதல்).
அதுவே ஹிஜ்ரா ஆண்டாக கணக்கிடப்பட்டு ஆண்டின் பெயராக மாறியது. இந்த இடப்பெயர்வு என்பது இழப்புகளையும்,தியாங்களையும் மையமாக கொண்டது என்பதால் இதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
வெறுமனே ஆண்டை அடையாளப்படுத்த நினைத்திருந்தால் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்திருக்கும். நபிகளார் சார்ந்து சொல்வதாக இருந்தாலும் இன்னமும் பல பத்தாண்டுகளை முன் கூட்டியே சொல்லி இருக்கமுடியும் ஆனால் இது தியாகத்தை நினைவூட்டவே ஹிஜ்ரத்தை மையப்படுத்தி கணக்கிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்பதே தியாகத்தாலும்,இழப்புகளாலும்,எதிர் நீச்சலாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஹிஜ்ராவும் ஒரு முன்மாதிரி என்பதை அறிவோம். எனவே ஹிஜ்ரத்தை நினைவு கொள்வோம். ஹிஜ்ரியை நடைமுறை படுத்துவோம் என்பதே கோட்பாடாக பார்க்கபடுகிறது !!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.