கோவை துடியலூர் என் ஜி ஓ காலணியில் எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பாக தன்னார்வலர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஆனைமலை ஆலம்விழுது குழுவினற்கு மரம் நட்டு பராமரிக்கும் பணி, ரத்ததான பணி, மாற்றுத்திறானாளிகளுக்கான கல்வி சேவை என மூன்று சேவை விருதுகளை வழங்கி பாராட்டினார்கள். இந்த விருதினை ஆலம்விழுது குழு சார்பாக பவித்ரன், சந்தோஷ் , கருப்பசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த விருதினைப் பெற்ற ஆலம்விழுது குழுவினரை இப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.