டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை30.7.22 (சனிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு பகுதி, நாராயண குரு ரோடு, சாய்பாபா கோவில், வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், கேகே புதூர் வீதி, 1 முதல் வீதி 8 வரை, பாரதி பார்க் ஒன்று இரண்டு, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், டிபி ரோடு, பூ மார்க்கெட் சாலை, காளீஸ்வரர் நகர், செல்லப்பா கவுண்டர் சாலை,
சி எஸ் டபிள்யூ மில்ஸ், ரங்கே கவுண்டர் சாலை, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை தெப்பக்குளம் மைதானம், ராம் நகர் அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, ரேஸ் கோர்ஸ், பயணியர் மாளிகை, விமானப்படை கல்லூரி, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத் அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, ஆகிய இடங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் மேலும் பொதுமக்கள் அதற்கு தகுநனதார்போல் வேலைகளை அமைத்துக் கொள்ளவும் கேட்டுகொண்டார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சுப்ரமணியம் & ஹனீப், கோவை.