கோவை மாவட்டம் ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட ஆனைமலை நகரப் பகுதியான 11 வது வார்டில் பழுதடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சரி செய்யப்படாமல் இருக்கும் 11 வது வார்டு பாலம். தேர்தலுக்கு முன்னும் பின்னும் இந்த பாலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் சரி செய்து தருவதாக கூறிச் சென்றனர்.
அதற்குப்பின் தற்காலிக மணல்மேடு அமைக்கப்பட்டது மழை பெய்த காரணத்தினால் அரித்து செல்லப்பட்டு விட்டது நிரந்தர தீர்வு ஏற்படவில்லை இன்று வரை பள்ளி குழந்தைகள் வயதானவர்கள் பாலத்தை கடக்கும் பொழுது விழும் வாய்ப்புகள் உள்ளது இதற்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஆனைமலை 11 ஆவது வார்டு பொதுமக்கள் ஆதங்கத்துடன் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் விரைவில் சரி செய்யப்படவில்லை எனில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலை இப்படியே தொடருமா?? இல்லை பாலம் சீரமைக்கப்படுமா??.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.