திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன்(70) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர், திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா ,வெற்றி விழா ,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.
பிரதாப் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்து 1986ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த இவர் 2012ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல்.
-சினிமா சிங்காரம்.