கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதிகளில் சாலை சேதம்,கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு, குப்பைத்தொட்டிகள் சீரமைக்கப்படாமலும் சுத்தம் செய்யப்படாத நிலையிலும் உள்ளன. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. சில நேரங்களில் விபத்தும் நடக்கின்றன.
வி.ஜி. ராவ் நகர் முதல் தெருவில்(புதிய வார்டு எண் 24)அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் மாநகராட்சி அரசு பள்ளி அருகே தெரு மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளது. கழிவு நீர் வடிந்து பள்ளி கழிவறைக்கு அருகாமையில் தேங்குகிறது. அதில் குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும், அந்த தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கும் நோய்கள் பரவும் நிலையில் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாகஉள்ளது. பொதுமக்களுக்கு இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்களின் பல நாள் பிரச்சனையாக உள்ள குப்பை தொட்டியை இடம் மாற்றி கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஹரிசங்கர். கோவை வடக்கு.