கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 நபர்களுக்கும்,
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் 2 நபர்களுக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 நபர்களுக்கும் என மொத்தம் 12 நபர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் ஜுலை 28 ஆம் தேதி அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு யாருக்காவது சளி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறும் படி சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.