வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. எனவே பொள்ளாச்சியில் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.