கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி வழி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் கோமதி அவர்கள் முன்னிலை வகித்தார்.
நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் வரவேற்று பேசி காமராஜர் குறித்து பேசினார். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் செயலாளர் ஜெய்லாப்தீன் துணை தலைவர் காளிமுத்து துணைச் செயலாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம்.
நகரமன்ற உறுப்பினர் கவிதா மணிகண்டன் மேலாண்மை குழு நிர்வாகி ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் காமராஜர் குறித்து பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.