கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதியிலிருந்து இரண்டு பேர் காரில் கோபாலபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் கோபாலபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார் . இந்நிலையில் நெடும்பாறை அருகே இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் நிற்கவில்லை. அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார். மற்ற இருவருக்கும் பாதிப்பில்லை என்றாலும் அச்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. காவல்துறையினர் வருவதற்கு முன்பே அப்பகுதி பொதுமக்கள் வாகன போக்குவரத்தை சரி செய்தனர். இதனையடுத்து விபத்து குறித்து அறிந்த மீனாட்சிபுரம் காவல்துறையினர் விபத்து நடந்த பகுதிக்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
-M.சுரேஷ் குமார்.