ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில புதிய விதிமுறைகளை உணவு வழங்கல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதிமுறைகள்:
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு வெளிமாநில வேலை செய்யும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அண்மையில் கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டதை தொடர்ந்து இம்முறையும் அவ்வாறு வழக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உணவு வழங்கல் துறை ரேஷன் கார்டுதரர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ரேஷன் அட்டைதாரர்கள் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியாது. அதே போல கிராமத்தில் குடும்ப வருமானம் இரண்டு லட்சத்துக்கும் மேல் இருந்தாலோ நகரத்தில் மூன்று லட்சத்திற்கும் மேல் இருந்தாலோ அவர்களும் ரேஷன் திட்டத்தில் பயன் பெற முடியாது என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
-சிவகுமார், சிந்தாதிரிப்பேட்டை.