விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடித் திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் இந்த வருடம் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடித் திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்ட நாளில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த இரண்டு வருடமாக திருவிழா நடக்காமல் இருந்ததால் இந்த வருடம் கோலாகலமாக தேரோட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13 அன்று வேலை செய்யும் பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.