கடலூர் மாவட்டம் மாநாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல் கபடி விளையாடி கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த நிகழ்வின் வீடியோ பலரை சோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில். அவரின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து பார்க்கையில் நெஞ்சம் பொறுக்குதில்லை.
கபடி வீரர் விமலின் குடும்பத்தினரின் வருங்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நிவாரணம் பரிதாபத்திற்கு அல்ல இதுபோன்ற வீர விளையாட்டுகளில் உயிர் பிரிந்தால் தமிழகஅரசு நம் குடும்பத்தை காக்கும் என்ற நம்பிக்கையை தற்போதுள்ள இளைஞர்களுக்கு விதைக்கும் வகையில் இந்த நிவாரணத்தொகை உடனே வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-நெல்லை, அன்சாரி.