தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் சில காலமாக தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலை மீண்டும் யாருக்கும் வராமல் இருப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் சிறப்புமிக்க மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உளவியல் விழிப்புணர்வு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். சமீபத்தில் தான் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.