சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க உள்ளனர். கடலில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் வசனங்கள், கதைகள், கவிதைகள், அவரின் எழுத்துக்களை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானத்தை உலகத்தரத்தில் கட்ட இருக்கிறார்கள். இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருவள்ளூவர் சிலை 133 அடி உயரம் தொடந்து. இதைவிட 1 அடி உயர்தத்தில் பேனா சிலையை வைக்க உள்ளனர். இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.