2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஜூலை 27, புதன் அன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. பின்னர் 28 ஜூலை, வியாழன் அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. காமன் வெல்த் கேம்ஸ் போட்டியின் தொடக்க விழாவின் போது பி.வி.சிந்து (பேட்மிண்டன் வீராங்கனை) மற்றும் மன்பிரீத் சிங் (ஃபீல்ட் ஹாக்கி வீரர்) ஆகியோரால் இந்தியக் குழு வழிநடத்தப்பட்டது.
தொடக்க விழாவில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்காக நியமிக்கப்பட்ட கொடி ஏந்தியவர் ஆவார், ஆனால் உலக தடகள சாம்பியன்ஷிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் CWG 2022 இலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தடகள சாம்பியன்ஷிப்பிள் நீரஜ் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டிரம்மர்-பெர்குசியனிஸ்ட் ஆபிரகாம் பேடி டெட்டே அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சியை தொடங்க, பின்னர், இந்திய கிளாசிக்கல் பாடகரும் இசையமைப்பாளருமான ரஞ்சனா கட்டக் தலைமை தாங்கினார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு காமன் வெல்த் கேம் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான விளையாட்டாக கருதப்படுகிறது. COVID-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கத்தை இது சமாளிக்க வேண்டியிருந்தது. தொடக்க விழாவில் இளவரசர் சார்லஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
CWG பற்றி பேசுகையில், 72 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் நுழைந்துள்ளனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் முந்தைய பதிப்பில் இந்தியா 66 பதக்கங்களை வென்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரிசங்கர்.