ஆந்திர மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக, தனது மருமகளை கொலை செய்து, தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கோவக்கார மாமியாரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவரின் மருமகள் வசுந்தரா. மாமியார் மற்றும் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வசுந்தராவின் உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனால் உக்கிரமாக இருந்த சுப்பம்மா, வீட்டில் யாரும் இல்லாத மாலை நேரத்தில், மருமகள் வசுந்தராவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆட்களை கூட்டி வந்து அடிக்கிறாயா? என கோபமாக வீட்டில் இருந்த அரிவாளால், ஆடு வெட்டுவது போல் ஒரே வெட்டாக மருமகள் தலையை வெட்டியுள்ளார்.
பின் தலையை எடுத்துக் கொண்டு, ஆங்காரத்துடன் தெருவில் நடந்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி தீர்க்க, மருமகளை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கோபக்கார மாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.