தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனவே தமிழகத்தில் ஆங்காங்கே கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக போலீசார் பிரச்சாரப்பதாகைகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆனைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆனைமலை டிஎஸ்பி கீர்த்திவாசன்மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஆனைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சார பதாகை வைத்தனர். அதில்
ஆனைமலையை கஞ்சா இல்லாத தாலுகாவாக மாற்றுவோம் கஞ்சா விற்பது தெரிய வந்தால் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி போதைப்பொருள் ஒழிப்பு
பிரச்சார பதாகைகளை பொதுமக்கள் பார்வையில் படும்படி பல்வேறு இடங்களில் வைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
–அலாவுதீன் ஆனைமலை.