ஆனைமலை தாலுகாவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தனி தாலுகாவாக ஆனைமலை தாலுகா செயல்பட்டு வருகிறது. இதற்கு தாலுகா அலுவலகம் தற்காலிகமாக ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. எனவே புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தாலுகா அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று

புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்டு 4ஆம் தேதி வியாழக்கிழமை நேற்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதையொட்டி புதிய வட்டாட்சியர் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம்ஞானதேவ்ராவ் அவர்கள் ஆனைமலை வட்டாட்சியர் என் பானுமதி அவர்கள், ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp