பொள்ளாச்சி அருகே உள்ள சூலேஸ்வரன்பட்டியைச் சார்ந்த சலீம் என்பவரின் மகன் ஷாஜகான் வயது 34 பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் 28/8/2022. (ஞாயிற்றுக்கிழமை உறவினருடன் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது காலில் அணிந்து இருந்து செருப்பு தண்ணீரில் அடித்துச் சென்று விட்டதால் அதனை எடுக்க சென்ற பொழுது ஆழமான பகுதியான கன்னிமாரி கஜம் என்ற இடத்தில் நீர் சுழலில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஆனைமலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியை தொடங்கினர் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மறுநாள்27/8/2022 திங்கள்கிழமை மாலை வரை இடைவிடாது தேடிய தீயணைப்பு படையினரால் சடலத்தை மீட்க முடியவில்லை. ஆற்றை ஒட்டிய அடுத்தடுத்த ஊர்கள் வரை விசாரித்தும் தேடியும் தீயணைப்பு படையினருக்கு இதுவரை சடலம் கிடைக்கப்பெறவில்லை.
நாளைய வரலாறு செய்திக்காக
–அலாவுதீன் ஆனைமலை.