ஆழியாறு அணைக்கட்டு அருகே உள்ள புளியங்கண்டி கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பழங்குடி தம்பதியினர் காயமடைந்தனர் ஆழியார் அணைக்கட்டின் ஜூரோ பாயிண்ட் பகுதியில் உள்ளது புளியங் கண்டி பழங்குடி கிராமம்.
இங்கு இரவாளர் மற்றும் மலசர் பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் சௌந்தர்யா (வயது 25) கணவர் ரமேஷ் (30) விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வந்த வீட்டின் மேற்கூரை இடிந்தது. இதில் சௌந்தர்யாவுக்கு தோள்பட்டையிலும் ரமேஷுக்கு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
சிகிட்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் உடன் ஆழியார் காவல் நிலைய அதிகாரிகளுடன் வீடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியினர் கிராமங்களிலும் வீடுகள் இது போன்ற நிலையிலேயே உள்ளது. அரசு மிக மோசமாக நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை உடனடியாக பராமரித்தும், தேவைப்படும் பூர்வகுடி மக்களுக்கு புதிதாக வீடுகளையும் கட்டித் தர வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய உயிர்சேத அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.