சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் கடந்த 10 தினங்களாக வரைபடப் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான
இணையதளம் சரிவர இயங்காமல் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படாமலும், தீர்வு காணப்படாமலும் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிக அனுதினமும் அதிகரித்து வருகிறது. ஆகவே, இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நெகிழிப்பையின் பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.