ஒரே நாளில் தலைகீழான பாஜக..!! பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு..!!!

   கடந்த 2020-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. அப்போது கூட்டணியின் தர்மத்தின் அடிப்படையில் நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் ஆட்சி அதிகாரத்தை பொருத்தவரையில் பாஜக தன்கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு கடந்த சில நாட்களாக இரு கூட்டணிகளும் கருத்து வேறுபாடு என்பது உச்சகட்டத்தை எட்டி இருந்தது.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. குறிப்பாக பீகாரின் அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கூட்டம் நடைப்பெற்றது.

தற்போது கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, தேஜஸ்வி யாதவுக்கு 43 சதவீதமும், நிதிஷ் குமாருக்கு 24 சதவீதமும், பாஜக முதல்வர் வேட்பாளருக்கு 19 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இதனால் பீகாரில் பாஜக தனது ஆளுமையை இழந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp