ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தார்சாலை பணிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம். சி. சண்முகையா MLA தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ரு.40 லட்சம் செலவில் கொல்லங்கிணறு – வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வரையில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம். சி. சண்முகையா MLA புதிய தார் சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் யூனியன் உதவி பொறியாளர் ரவி, பஞ்சாயத்து தலைவர்கள் லதாமுருகன், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி.