தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவில் உண்டியலை மர்மநபர் திருடிச் சென்றார். மற்றொரு கோவிலில் திருட முயற்சித்தபோது அங்கிருந்த அலாரம் அடித்ததால், மர்மநபர் தப்பி ஓடினார். உண்டியல் திருட்டு ஓட்டப்பிடாரம் அருகே அகிலாண்டபுரம்-வடக்கு ஆவரங்காடு கிராமத்திற்கு இடையில் உள்ள காட்டுப் பகுதியில் கக்கரம்பட்டி தூண்டில் கருப்பசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் பூசாரியாக கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் காலனியை சேர்ந்த சண்முகராஜ் (வயது 39) உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் சண்முகராஜ் பூஜைகளை முடித்துவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் கருப்பசாமி சிலைக்கும், முனியசாமி சிலைக்கும் இடையே வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து சண்முகராஜ், ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டியபுரம் கிராமத்தில் உள்ள அரிய நாச்சியம்மன் கோவிலில் மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். கோவிலில் இருந்து அலாரம் தொடர்ந்து அடித்ததால் மர்ம நபர் தப்பியோடிய சம்பவம் ஹம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி.