ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு பிஎம் கிசான் eKYC பதிவு செய்ய காலக்கெடு!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் என்ற வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11 தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த மே 31ஆம் தேதி 11 ஆவது தவணை 21,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெறுவதற்கு eKYC செய்து முடிக்க வேண்டும். eKYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.

ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும். இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும். OTP பதிவிட்டு Submit கொடுக்கவும். இத்துடன் உங்கள் eKYC முடிந்து விடும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp