வேலூர் நகரில் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மழைநீர் புகுந்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆகஸ்ட் 1 மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. குறிப்பாக வேலூர் மாநகர பகுதிகளில் கனமழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது ,அதே நேரம் வேலூர் கோட்டைக்கு எதிரே இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மழை நீரால் சூழப்பட்ட தால் பணியாளர்கள் ,நோயாளிகளும் சிரமத்துக்கு ஆளாகினர். அங்குள்ள மருத்துவ அலுவலரின் கணினி அறை, தடுப்பூசி போடும் இடம் உட்பட அனைத்துமே தண்ணீரால் சூழப்பட்டு மேலும் மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்த மேசைகள் நோயாளிகளின் படுக்கை என அனைத்துமே தண்ணீரில் தத்தளித்த மழைக்காலங்களில் மக்கள் பகுதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகும் சம்பவம் நீடிப்பதால் சுகாதார நிலையத்திலேயே நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மின்சார பொருட்கள் இயங்குவதால் மின் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மழை நீரை வெளியேற்றவும், வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே இருந்த மழைநீரை அகற்றினர்
நாளைய வரலாறு செய்திக்காக
-P. இரமேஷ் வேலூர்.