மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் கோட்டைமேடு வைரவிழா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினார். இதில் மாநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் விளம்பர பணிகள், பரப்புரை பணிகள், கள ஆயத்தம் , மக்கள் திரட்சி, ஆகியவை குறித்து கருத்தாய்வு நடத்தப்பட்டது.
முன்பைவிட தற்போதைய போராட்டத்தில் மக்கள் எழுச்சியாகவும், ஆர்வமாகவும், இருப்பதாக நிர்வாகிகள் கூறினர். முற்றுகைக்கு புறப்பட ரயில்களில் குடும்பம், குடும்பமாக முன்பதிவுகள் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் பேருந்துகள், வேன்களிலும் பெண்கள் உட்பட மக்களை அழைத்து வருவது குறித்தும் சூளுரைத்தனர். இங்கிருந்து அலை அலையாய் வரும் மக்களை சென்னையின் புறநகரங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைப்பது குறித்தும் திட்டமிடப்பட்டது.
இதில் மாநில செயலாளர்கள் கோவை MH.ஜாபர் அலி , நாகை முபாரக், மாநில துணை செயலாளர்கள் கோவை அப்துல் பஷீர், புதுகை. துரைமுகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குனிசை ஷாஜகான், ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அனீபா, ஜாபர் சாதிக், மற்றும் மாவட்ட , நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.