தமிழ்நாடு வாலிபர் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆறாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடக்கிறது.
இபோ போட்டியில் பங்கு பெறும் கோவை மாவட்ட ஆண்கள் அணித் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்க உள்ளது. இத்தேர்வில் 2002 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த வீரர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 96299 74745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.