கோவை ராம் நகர் பகுதியில், ஃபோர் ஸ்கொயர் மெடிக்கல் சென்டர் எனும் புதிய மருத்துவமனை துவக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவச்சலம் கலந்து கொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து மருத்துவமனையில் உள்ள கருவிகள் குறித்தும், அங்குள்ள வசதிகள் குறி்த்தும் பார்வையிட்டார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி. பக்தவச்சலம், கூறும் போது, இந்த மருத்துவமனையை இங்கு துவங்கிய தங்கவேலு மற்றும் சரவணன் ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் கிட்னி மற்றும் டயபடீஸ் சிகிச்சைகளுக்கு இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், தற்போது மருத்துவத்துறையில் அதிநவீன முறையில் செயல்படுகின்ற கருவிகளை இங்கு நிறுவி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவர் சரவணன் கூறும் போது ஈரோடு, கரூர், கோபி, அவிநாசி, நாமக்கல் ஆகிய ஊர்களில் மருத்துவ சேவையில் 30 வருடங்களாக செயல்பட்டுவந்த அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் ஒரு அங்கமாக, உள்ள, ஃபோர் ஸ்கொயர் மெடிக்கல் சென்டர் இப்பொழுது கோவை, ராம் நகரில் துவங்கப்பட்டுள்ளது.
சிறுநீரகம், நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய மருந்தகத்துடன் கூடிய ஐ.சி.யூ பராமரிப்பு இங்கு உள்ளது. நீரிழிவு நிபுணர்கள், சிறுநீரகத்தில் உள்ள பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகம் தேவைப்படாது.
சிறுநீரகபிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் குறித்து தேவையற்ற அச்சம் கொண்டுள்ளனர். இன்றைய சுகாதாரப் பாதுகாப்பு முறையின் முன்னேற்றங்களுடன் நவீன மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் கூட செய்து பொதுமக்கள் பயணடையலாம் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் ரகு வழக்கறிஞர் சுந்தரவடிவேலு என பலரும் கலந்து கொண்டனர்.
– சீனி, போத்தனூர்.