வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இட ஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ‘சமூகநீதி’தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த, சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதை மற்ற எந்த இயக்கங்களையும் விட, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மக்கள் தொகையில் மிகக் குறைவான சதவீதம் உள்ள உயர்சாதியினர் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால் சமூகம் பிளவுபட்டு விடும் என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை முறியடிக்க தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச்செயலாளர் ராயல் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் (வடக்கு) பிரணவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச்செயலாளர் (மேற்கு) இரா.வனம் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் உயர்சாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் மனோகர், புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் பால சரவணன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாநகர் மாவட்ட தலைவர் முரளி, புறநகர் மாவட்ட பொருளாளர் சுதாகர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-பாரூக்.