75 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு கோவில்பட்டி (Kovilpatti Students Mini Marathon) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகத்தில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டி இரண்டு பிரிவுகளாக கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல் எஸ் எஸ் டி எம் கல்லூரி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியை கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டியை பள்ளியை சேர்ந்த மாரிச்செல்வம் முதலிடத்தையும், அதே பள்ளியை சேர்ந்த உத்தண்டுராமன், கபிலன் ஆகியோர் 2 மற்றும் 3வது இடத்தினை பிடித்தனர்.
பெண்களுக்கான பிரிவில் ஏ.பி.சி. கல்லூரியை சேர்ந்த மாணவி ஜெயபாரதி முதலிடத்தினையும் அதே கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கௌஷிகா, கலைவாணி ஆகியோர் 2 மற்றும் 3வது இடத்தினை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.